சஹாரா என்று சொன்னாலே வறண்டு போன நிலம்.வெப்பமான பாலைவனம் போன்ற எண்ணங்கள்தான் பலருக்கும் மனத்தில் தோன்றும்.உலகின் வெப்பமான அந்தப் பாலைவனத்தில் மழை என்பதே அரிது.
50 ஆண்டுகளில் முதன்முறையாக மொரோக்கோவின் (Morocco) தென்கிழக்குப் பகுதியில் இருக்கும் பாலைவனத்தில் வெள்ளம் ஏற்பட்டது.
ஓராண்டில் பெய்யவேண்டிய மழை 2 நாள்களில் பெlய்துள்ளது.
காற்றின் ஈரத்தன்மை அதிகரித்திருப்பதால் வரும் மாதங்களில் கூடுதல் மழையை எதிர்பார்க்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.