BREAKING

உலகம்

கண் பார்வைைய இழந்த சல்மான் ருஷ்டி- கத்திகுத்து தாக்குதல் பற்றி புத்தகம் எழுதுகிறார்

இந்தியாவில் பிறந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி 1988-ம் ஆண்டு எழுதிய ”தி சாத்தானிக் வெர்சஸ்” என்ற புத்தகம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அவருக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.

இதற்கிடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சல்மான் ருஷ்டி மீது வாலிபர் ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்தினார். இந்த தாக்குதலில் அவர் ஒரு கண் பார்வையை இழந்ததுடன் சம்பவத்துக்கு பிறகு முதல் முறையாக சல்மான் ருஷ்டி கடந்த 20 ஆம் திகதி நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்த நிலையில் தன் மீதான கத்திகுத்து தாக்குதல் சம்பவம் பற்றி புத்தகம் எழுத போவதாக சல்மான் ருஷ்டி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், என் மீதான தாக்குதல், என்ன நடந்தது மற்றும் அதன் அர்த்தம் என்ன, தாக்குதல் பற்றி மட்டுமின்றி அதை சுற்றியும் நடந்தது பற்றியும் ஒரு புத்தகத்தை எழுத முயற்சிக்கிறேன். இது ஒரு சிறிய புத்தகம். இது உலகில் எழுதுவதற்கு எளிதான புத்தகம் அல்ல எனவும் குறிப்பிட்டார்.

 

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!