இஸ்ரேலின் வட பிராந்தியத்தின் சிசேரியா நகரில் அமைந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இல்லத்தை இலக்கு வைத்து குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் பிரதமர் நெதன்யாகு மற்றும் அவரது குடும்பத்தினர் இருக்கவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலை இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
தாக்குதல் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த ஒக்டோபர் மாதம் இஸ்ரேல் பிரதமரின் இல்லத்தை இலக்கு வைத்து ஆளில்லா விமானத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.