இந்தியாவில் நடைபெறும் ஜி20 நிதிக்கூட்டத்தின் ஒரு கட்டமாக கடன் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அமெரிக்காவும், சீனாவும் தங்கள் நிதி அதிகாரிகளுக்கு இடையே துணை நிலை பேச்சுவார்த்தைகளை வெள்ளிக்கிழமை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெங்களுரில் ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டம் இன்று இடம்பெற்றது.
இந்த நிலையில் இன்று கூட்டத்தில் கடன் உட்பட பலதரப்பு பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இன்றைய பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்க திறைசேரியின் பேச்சாளர் மற்றும் சீனாவின் நிதி அமைச்சு, அதன் மத்திய வங்கியின் அதிகாரிகள் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ள மறுத்துவிட்டனர்.