யாழ்ப்பாண பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களினால் தற்போது பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் பேரணியை இடைமறித்த பொலிஸார் பேரணியை நடத்த வேண்டாம் என வலியுறுத்தியதால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இருந்து ஆரம்பித்த பேரணியை பொலிஸார் தடுத்த போதும் போராட்டக்காரர்கள் முன்னோக்கி சென்றுள்ள நிலையில், தற்போது இடை மறிக்கப்பட்டுள்ளனர்.