புதிய பிரதி அமைச்சர்கள் 29 பேர் இன்று (21) ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். அவர்களின் விபரம் வருமாறு,
பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ – பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்
நாமல் கருணாரத்ன – விவசாயம் மற்றும் கால்நடை பிரதி அமைச்சர்
வசந்த பியதிஸ்ஸ -கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர்
நலின் ஹெவகே- தொழிற்கல்வி பிரதி அமைச்சர்
ஆர். எம். ஜயவர்தன – வர்த்தகம், வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர்
கமகெதர திசாநாயக்க – புத்த சாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சர்
டி. பீ.சரத் – வீடமைப்பு பிரதி அமைச்சர்
ரத்ன கமகே – கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வள பிரதி அமைச்சர்
மஹிந்த ஜயசிங்க – தொழில் பிரதி அமைச்சர்
அருண ஜயசேகர – பாதுகாப்பு பிரதி அமைச்சர்
அருண் ஹேமச்சந்திர – வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர்
அண்டன் ஜெயக்கொடி – சுற்றாடல் பிரதி அமைச்சர்
மொஹமட் முனீர் – தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர்
பொறியியலாளர் எரங்க வீரரத்ன – டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர்
எரங்க குணசேகர – இளைஞர் விவகார பிரதி அமைச்சர்
சதுரங்க அபேசிங்க – கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர்
பொறியியலாளர் ஜனித் ருவன் கொடித்துவக்கு – துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர்
நாமல் சுதர்சன – பெண்கள் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர்
ருவன் செனரத் – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர்
கலாநிதி பிரசன்ன குமார குணசேன – போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர்
டொக்டர் ஹன்சக விஜேமுனி – சுகாதார மற்றும் ஊடக பிரதி அமைச்சர்
உபாலி சமரசிங்க – கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர்
ருவன் சமிந்த ரணசிங்க – சுற்றுலா பிரதி அமைச்சர்
சுகத் திலகரத்ன – விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்
சுந்தரலிங்கம் பிரதீப் – பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர்
சட்டத்தரணி சுனில் வட்டகல – பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர்
கலாநிதி மதுர செனவிரத்ன – கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர்
கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும – நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர்
கலாநிதி சுசில் ரணசிங்க – காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர்.