BREAKING

உள்நாட்டு செய்தி

கொழும்பு துறைமுக நகர Duty-Free Shop ஜனாதிபதியால் திறந்து வைப்பு

கொழும்பு துறைமுக நகர Duty-Free Shop ஜனாதிபதியால் திறந்து வைப்பு

கொழும்பு துறைமுக நகரத்தில் ( Colombo port city) நிர்மாணிக்கப்பட்ட Duty-Free Shop வரியில்லா வர்த்தக தொகுதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நேற்று (05) மாலை திறந்து வைக்கப்பட்டது.

இந்த வர்த்தகத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டிருக்கும் வரியில்லா வர்த்தக தொகுதி, விற்பனை நிலையங்கள், உணவகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

இதற்குள் One World, China Duty Free Group (CDFG) மற்றும் Flemingo ஆகியவை இந்த வர்த்தகத் தொகுதியில் தங்கள் செயல்பாடுகளைத் ஆரம்பித்திருப்பதன் மூலம், கொழும்பு துறைமுக நகரம், பிராந்தியத்தில் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தகத் தொகுதியாக பரிணமிக்கும்.

துறைமுக நகரை இவ்வாறு அபிவிருத்தி செய்ய முடியும் என இரண்டு வருடங்களுக்கு முன்னர் யாரும் எதிர்பார்க்கவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் அரசாங்கம் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியமையினால் இன்று துறைமுக நகரின் நிதிச் செயற்பாடுகளை தொடங்க முடிந்துள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சுமார் 100 நிறுவனங்கள் துறைமுக நகரம் குறித்து கவனம் செலுத்தியுள்ளன. அவற்றில் 74 நிறுவனங்கள் இந்த வருட இறுதிக்குள் துறைமுக நகரத்தில் முதலீடு செய்ய உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கையின் சுற்றுலா துறை உலக அளவில் பிரசித்தம் பெற்றுள்ளது. இந்த வர்த்தகக் கட்டிட தொகுதி இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவார்கள். அவர்களுக்குத் தேவையான பொருட்கள் கிடைக்கும் வகையில் வணிக வளாகங்களை நிர்மாணித்து இந்த துறைமுக நகரத்தை மேம்படுத்தியுள்ளோம். இது துறைமுக நகரத்தின் ஆரம்பமாக மட்டுமே அமையும்.

துறைமுக நகரை இவ்வாறு அபிவிருத்தி செய்ய முடியும் என்ற நம்பிக்கை இரண்டு வருடங்களுக்கு முன்னர் எமக்கு இருக்கவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியதன் காரணமாகவே இன்று இப்பணியை செய்ய முடிந்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் கடன் வழங்கிய 18 நாடுகளுடன் இந்த வேலைத்திட்டத்தை தொடர்வதற்கு நாம் உடன்படிக்கை செய்துள்ளோம். அந்த ஒப்பந்தங்களை மாற்றாமல் தொடர்ச்சியாக கொண்டு சென்றால் இலங்கைக்கு நல்ல எதிர்காலம் கிட்டும். அந்த உடன்படிக்கைகளில் திருத்தம் செய்ய முற்பட்டால், எதிர்காலம் கேள்விக்குறியாகும்.

குறிப்பாக 100 நிறுவனங்கள் இன்று துறைமுக நகரம் குறித்து கவனம் செலுத்தியுள்ளன. அதில் 74 நிறுவனங்கள் இந்த வருட இறுதிக்குள் இலங்கையில் முதலீடு செய்யவுள்ளன. மேலும், கொழும்பு கோட்டையில் புதிய சுற்றுலா வலயத்தை ஆரம்பிக்க உள்ளோம். இதனால், இப்பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!