BREAKING

உள்நாட்டு செய்தி

26 நாட்களில் 212,838 சுற்றுலா பயணிகள் வருகை

26 நாட்களில் 212,838 சுற்றுலா பயணிகள் வருகை

இந்த ஆண்டின் முதல் 26 நாட்களில் 200,000 சுற்றுலாப் பயணிகளை இலங்கை வரவேற்றுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் மூன்று மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை பதிவு செய்ய இலங்கை இலக்கு வைத்துள்ளது.

SLTDA அண்மைய புள்ளிவிபரங்களின்படி, 2025 ஜனவரி 26 வரை இலங்கைக்கு 212,838 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

அதேவேளையில் இந்தியாவும் ரஷ்யாவும் உலக சுற்றுலாப் பயணிகளின் வருகையில் முதல் இரண்டு இடங்களில் தொடர்ந்தும் உள்ளது.

இந்த எண்ணிக்கை ஏற்கனவே கடந்த ஆண்டு ஜனவரியில் பதிவு செய்யப்பட்ட 208,253 வருகையை விஞ்சியுள்ளது.

இதற்கிடையில், அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை ஜனவரி இரண்டாவது வாரத்தில் பதிவாகியுள்ளது.

இதன்போது மொத்தம் 57,561 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர்.

ஜனவரி மாதத்தின் மூன்றாவது வாரத்தில் 57,473 சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் பதிவாகியுள்ளதுடன், முதல் வாரத்தில் 54,853 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர், இந்த மாதத்தில் மொத்தம் 37,383 இந்திய சுற்றுலாப் பயணிகள் தீவுக்கு வருகை தந்துள்ளனர்.

மொத்தம் 29,266 சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் ரஷ்யா இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட நாடாக உள்ளது.

இது தவிர ஐக்கிய இராஜ்ஜியம், ஜெர்மனி, சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்தும் கணிசமான எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!