வெளிநாட்டுக் கடன் மொத்தமாக 37 பில்லியன் அமெரிக்க டொலர்கள் – ஜனாதிபதி

இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மொத்தமாக 37 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என ஜனாதிபதி இன்று (02) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதில் 10.6 பில்லியன் அமெரிக்க டொலர் இருதரப்புக் கடனும், 11.7 பில்லியன் அமெரிக்க டொலர் பலதரப்புக் கடனும், 14.7 பில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தகக் கடனும் மற்றும் 12.5 பில்லியன் அமெரிக்க டொலர் இறையாண்மை பத்திரங்களும் உள்ளடங்கும்.

கடனை மீளச் செலுத்துவது தொடர்பில் இலங்கையின் உத்தியோகபூர்வ கடனாளிகளுடன் ஜூன் 26ஆம் திகதி உடன்பாடு எட்டப்பட்டதாக அறிவித்தார். இதனை இலங்கையின் சார்பில் அங்கீகரிக்கப்பட்ட அமைச்சரவை அதிகாரிகள் இந்த ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளனர்.

வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையை செயற்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற விசேட உரையில் தெரிவித்தார்.

Exit mobile version