விமானிகளின் தவறு காரணமாகவே இலங்கை விமானப்படை யினரின் K-8 ரக விமானம் விபத்துக்குள்ளானது

பயிற்சியில் ஈடுபடும் போதும் விமானிகளின் தவறு காரணமாகவே இலங்கை விமானப்படை யினரின் K-8 ரக விமானம் அண்மையில் விபத்துக்குள்ளானதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

அறிக்கையின்படி, விமானம் மற்றும் இயந்திரங்கள் நன்கு பராமரிக்கப்பட்டதுடன் பழமையானவை அல்ல என தெரிவித்தார்.

‘வீதியில் பழைய வாகனங்கள் ஓடுவது போல விமானங்களில் அப்படிச் செய்ய முடியாது. இந்த குறிப்பிட்ட விமானத்தை இயக்கிய விமானிகள் பயிற்சியில் இருந்தனர். அவர்களால் ஒரு தவறு நடந்துள்ளது. பயிற்சியாளர்கள் விபத்தில் இருந்து தப்பியதில் நாங்கள் நிம்மதியடைகிறோம். இது பயிற்சியின் போது ஒரு சாதாரண சம்பவம், உலகம் முழுவதும் இப்படி நடக்கிறது என்று அவர் கூறினார்.

விபத்து குறித்த தொழில்நுட்ப அறிக்கையின் கண்டுபிடிப்பும் இதுதான் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தினார்.

Exit mobile version