வாட்ஸ்அப்-இல் ChatGPT – பயன்படுத்துவது எப்படி?

வாட்ஸ்அப் உலகின் அதிக பிரபலமான குறுந்தகவல் செயலியாக இருக்கும் போதிலும், பெரும்பாலானோர் டெக்ஸ்ட் செய்வதை அதிகம் விரும்புவதில்லை. இவ்வாறு டெக்ஸ்ட் செய்ய பிடிக்காதவர்களுக்கு ChatGPT இனி உதவும். வாட்ஸ்அப்-இல் பயனர்கள் கிட்ஹப் மூலம் ChatGPT பயன்படுத்த முடியும்.

வாட்ஸ்அப்-இல் கிட்ஹப் இண்டகிரேட் செய்த பின் ChatGPT வாட்ஸ்அப் குறுந்தகவல்களுக்கு பதில் அளிக்க துவங்கி விடும். ChatGPT-இன் உரையாடல் திறன், பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பயனர் கேல்விகளுக்கு பதில் அளிப்பதில் கூகுள் செய்யாததை கூட ChatGPT செய்து அசத்துகிறது. இதே போன்று இந்த ஏஐ டூல் குறுந்தகவல்களை கையாளுகிறது. ChatGPT அளிக்கும் பதில்கள் மனிதர்கள் அனுப்புவதை போன்றே இருப்பதால், யார் பதில் அனுப்புகின்றனர் என்தை கண்டறிவது வித்தியாசமான விடயமாகும்.

Exit mobile version