யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்று இடம்பெற்றது.
அதன்படி யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மற்றும் பல பொதுக் கூட்டங்களில் அவர் கலந்து கொள்ள உள்ளதாகவும் வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி மிகுந்த கவனம் செலுத்த உள்ளார் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த கூட்டத்தில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண ஆளுநர், அரசாங்க அதிபர் மற்றும் அரச நிறுவனங்களின் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துக் கொண்டனர்.
இதேவேளை இன்றைய கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொள்வதற்கான 20 முக்கிய விடயங்களை உள்ளடக்கிய விடயதானங்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பிரதீபனுக்கு வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.