உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி மற்றும் சீன அதிபர் சி ஜின்பிங் இடையிலான சந்திப்பு விரைவில் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனை உக்ரைனின் அதிபர் ஸெலென்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்.
உக்ரைனின் தற்போதைய நிலவரம் தொடர்பில், உடனடி தீர்விற்கான அமைதிப் பேச்சுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது, இதற்கு உக்ரைன் அதிபரும் தனது சம்மதத்தை தெரிவித்துள்ளார்.
சந்திப்பின் நோக்கம்
இது தொடர்பில் உக்ரைனின் அதிபர் தெரிவித்துள்ளதாவது,
மூன்றாம் உலகப்போர் அபாயத்தை குறைப்பதற்கும், சீனா ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்குவதை தடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை உக்ரைன் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
சீனா அமைதியை விரும்பும் அதேவேளை உக்ரேனை ஆதரிக்கும் என நம்புவதாகவும் உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.