மியன்மாரில் 7.7 மெக்னிடியூட் நிலநடுக்கம் – வானுயர்ந்த கட்டடங்கள் தரைமட்டம்

மியன்மாரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அங்கு வசிக்கும் இலங்கையர்களுக்கோ அல்லது தாய்லாந்தில் வசிக்கும் இலங்கையர்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளிலும் உள்ள இலங்கையர்கள் தொடர்பாக மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.

அவசரநிலை ஏற்பட்டால், தாய்லாந்தில் உள்ள இலங்கையர்கள் +66 812498011 என்ற அவசர தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

சுமார் 200 இலங்கையர்கள் மியான்மரில் தங்கியிருப்பதாகவும், மற்றொரு இலங்கையர் குழு தாய்லாந்தின் பாங்காக்கில் தங்கியிருப்பதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தாய்லாந்தின், பாங்கொக் நகரிலும் 7.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டதுடன், 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மியான்மரின் சாகைங் பகுதியில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது.

இதையடுத்து, மியான்மர் அதன் தலைநகர் நேபிடாவ் மற்றும் மண்டலே உட்பட ஆறு பிராந்தியங்களில் அவசரநிலையை அறிவித்துள்ளது.

Exit mobile version