கடந்த 26ஆம் திகதி மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட அனர்த்தத்தில் சம்மாந்துறையை சேர்ந்த 6 மத்ரசா மாணவர்கள் உயிரிழந்தனர்.அவர்களில் ஐவரின் உடலம் (ஜனாசா) ஏறகனவே கண்டெடுக்கப்பட்டது.
இருந்த போதிலும் ஐந்து நாட்களுக்கு பின்னர் இன்று (30) கண்டெடுக்கப்பட்ட மத்ரஸா மாணவன் மௌலவி கலீல் தஷ்ரீப் என்பவருடைய உடலம் (ஜனாஸா) சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மஹா வித்தியாலய மைதானத்தில் பெருந்திரளான மக்கள் வெள்ளத்தின் பிரசன்னத்துடன் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, சம்மாந்துறையில் பெரும் திரளான மக்கள் மத்தியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மேலும் இன்றைய தினம் சம்மாந்துறை நகரில் அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்பட்டு துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டது.