பொழுதுபோக்கிற்காக தினமும் ரூ. 2.5 கோடி செலவு – துபாய் கோடீஸ்வரி

இங்கிலாந்து நாட்டின் சசெக்ஸ் நகரில் பிறந்த சௌதி எனும் பெண் தனது 6 வயதில் துபாய் நாட்டுக்கு சென்றதுடன், பின்னர் அவர் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் கல்விகற்றார். அப்போது அவருக்கும், சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த ஜமால் பின் நடக் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மாறி அவரையே திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கடந்தும் தற்போது அவர்கள் கற்பனைக்கு எட்டாத ஆடம்பரமான வாழ்க்கை முறையில் ஒன்றாக உலகம் சுற்றி வருகிறார்கள். கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்த சௌதியின் விருப்பம் பொழுதுபோக்கு ஒன்று மட்டுமே.இதற்காக அவர் நாள் ஒன்றுக்கு 2.5 கோடி  ரூபா வரை செலவு செய்கிறார்.

ஷாப்பிங் செல்வதில் அதிக நாட்டம் கொண்ட சௌதி தனது கிரெடிட் கார்டுகள் மூலம் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது, ஊர் சுற்றுவது என கழித்து வருகிறார். அதனை ஊக்குவிக்கும் வகையில் கிரெடிட் கார்ட் வழங்கும் நிறுவனங்களும் உங்கள் ஷாப்பிங்கிற்கு வானமே உச்சம் என்று தெரிவித்துள்ளது. துபாயைச் சேர்ந்த இந்த இல்லத்தரசி, ஷாப்பிங், உணவு, பயணம் என ஆடம்பரமாக செலவு செய்வதை இன்றளவும் வழமையாக்கியுள்ளார். டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கான பின் தொடர்பாளர்கள் இவருக்கு பின்னால் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version