சிலாபம் – புத்தளம் வீதியில் பந்துலு ஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று (17) காலை நிக்கவெரட்டியவிலிருந்து கொழும்புக்குச் சென்ற இ.போ.சபை பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலுள்ள ஒரு மரம், ஒரு கடை மற்றும் ஒரு வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் பயணிகள் மற்றும் வீட்டில் இருந்த சிறு குழந்தை உட்பட 21 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் பஸ் சாரதி மற்றும் நடத்துனரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துக்கான காரணம் வெளியாகாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.