பூஸா சிறைச்சாலையின் ஜெயிலர் ஒருவர் CCDயால் கைது செய்து விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பாதாள உலக தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட தினத்தன்று அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பூஸா சிறைச்சாலையின் ஜெயிலர் ஒருவர் CCDயால் கைது செய்யப்பட்டு மார்ச் 21 வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள், சம்பவம் நடந்த அன்று கணேமுல்ல சஞ்சீவவை சிறைச்சாலை அதிகாரி நீதிமன்றத்திற்கு அழைத்து வந்ததாகவும் தெரிவித்தனர்.

அவர் கடமை தவறியதால் இந்தக் குற்றம் நடந்ததா என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

தொலைபேசி அழைப்புகளின் பதிவை பரிசீலிக்கவும் பொலிசார் அனுமதி கோரியுள்ளனர்.

Exit mobile version