BREAKING

உள்நாட்டு செய்தி

புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம்

புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம்

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

1)பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

2)பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக பேராசிரியர் சந்தன அபேரத்ன பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

3)வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சராக விஜித ஹேரத் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

4)நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சராக சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்

5)இராமலிங்கம் சந்திரசேகர் மீன்பிடி, நீரியல் மற்றும் பெருங்கடல் வளத்துறை அமைச்சராக பதவியேற்றார்.

6)சரோஜா சாவித்திரி பால்ராஜ் பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சராக பதவியேற்றார்.

7)கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சராக சுனில் ஹந்துன்நெத்தி பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

8)கே.டி. லால்காந்த விவசாயம், கால்நடை வளர்ப்பு, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

9)ஹர்ஷன நாணயக்கார – நீதி, தேசிய ஒருமைப்பாடு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

10)நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சராக அனுர கருணாதிலக்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

11)துறைமுகங்கள், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராக பிமல் ரத்னாயக்கா பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

12)வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ ஊடக மற்றும் சுகாதார அமைச்சராக பதவி பிரமாணம் செய்துகொண்டார்.

13)பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால பதவி பிரமாணம் செய்துகொண்டார்.

14)சமந்த வித்தியரத்னவுக்கு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சராக பதவி பிரமாணம் செய்துகொண்டார்.

15)விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

16)விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

17)வசந்த சமரசிங்க வர்த்தகம், வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

18)தொழிலாளர் அமைச்சராக பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

19)பொறியியலாளர் குமார ஜெயக்கொடி எரிசக்தி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்

20)கலாநிதி தம்மிக்க படபெந்தி சுற்றாடல் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

21)நிதி, டிஜிட்டல் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!