இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (04) இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
தாய்லாந்தின் பாங்கொக்கில் பிம்ஸ்டெக் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்தின மோடி நேற்று தாய்லாந்து புறப்பட்டு சென்ற நிலையில் அங்கிருந்து இலங்கைக்கு வருகைதந்துள்ளார்.
பிரதமர் பயணிக்கும் VVIP உயர் பாதுகாப்பு தர விமானமான Air India One. Boeing 777-300ER (K7066) விமானம் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இரவு 08.32 PM மணியளவில் தரையிறங்கியது.