பாடசாலைகளுக்கு விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக மேல்மாகாண பாடசாலைகளை நாளை (14) திறப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்க மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வியமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, மாகாண கல்வி அதிகாரிகள் வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் கலந்துரையாடி இது குறித்து தீர்மானங்களை மேற்கொள்ளுமாறும் கல்வியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Exit mobile version