மத்திய கிழக்கு நாடான சிரியாவில் 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் உள்நாட்டு போர் ஆரம்பமானது. சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து யாத் தஹ்ரிர் அல் ஹாம் என்ற கிளர்ச்சி அமைப்பினர் கடந்த வாரம் முதல் ராணுவத்துடன் மீண்டும் சண்டையை தொடங்கினர்.
மேலும்,ஆசாத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர சூளுரைத்துள்ள கிளர்ச்சியாளர்கள் இன்று(08) சிரியா தலைநகர் டமாஸ்கஸ்-க்குள் நுழைந்ததை பகிரங்கமாக அறிவித்தனர்.
இதைத் தொடர்ந்து அரசு கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் முழுவதும் கிளர்ச்சியாளர்கள் குழுவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதன் மூலம் ஆசாத் குடும்பத்தின் 50 ஆண்டுகால ஆட்சி சிரியாவில் முடிவுக்கு வந்தது. கிளர்ச்சியாளர்கள் குழு டமாஸ்கஸ்-ஐ நுழைந்ததை அடுத்து பஷார் அல் ஆசாத் நாட்டை விட்டு விமானத்தில் தப்பியோடி விட்டதாக தகவல்கள் வெளியாகின. எனினும், அவர் எங்கு சென்றுள்ளார் விமானத்திற்கு என்ன ஆனது என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.