பங்களாதேஷில் அந்நியச் செலாவணி பற்றாக்குறை

பங்களாதேஷில் அந்நியச் செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முகமது யூனிஸ் வெளிநாட்டு நாணய இருப்புக்களை மீண்டும் கட்டமைக்க சர்வதேச நாணய நிதியத்திடம் 3 பில்லியன் டொலர் , உலக வங்கியிடமிருந்து 1 பில்லியன் டொலரும் , ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையிடமிருந்து (JICA) 1 பில்லியன் டொலரும் கோரியிருந்த நிலையில் இந்த நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவ தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் செய்தித் தொடர்பாளர் Julie Kozack தெரிவித்துள்ளார்.

நாங்கள் பங்களாதேஷுடன் இணைந்து பணியாற்றுவதற்கும், மக்களுக்கு ஆதரவாக இருப்பதற்கும் முழு உறுதியுடன் இருக்கிறோம். அதிகாரிகளுடன் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றுவோம். மேலும், நிச்சயமாக, வரவிருக்கும் பணியின் ஒரு பகுதியாக அனைத்து பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் சாத்தியமான நிதி தேவைகள் அனைத்தையும் மதிப்பிடும் என்று கூறினார்.

IMF இன் Managing Director, Kristalina Georgieva (R side) ஐ.நா. பொதுச் சபையில் கலந்து கொள்வார், இதன்போது பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் புதிய விரிவாக்கப்பட்ட நிதி வசதியை செப். 25 அன்று பரிசீலிக்கும், அத்துடன் Kristalina Georgieva தலைமையிலான குழுவினர் பங்களாதேஷிற்கு செல்லவுள்ளனர் எனவும் அங்குள்ள உண்மைத் தன்மைகள் குறித்து ஆராய்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version