BREAKING

உள்நாட்டு செய்தி

நுவரெலியாவிலும் அடை மழை – வெள்ள நீரில் மூழ்கிய விவசாய நிலங்களும் வீடுகளும்

நுவரெலியாவிலும் அடை மழை - வெள்ள நீரில் மூழ்கிய விவசாய நிலங்களும் வீடுகளும்

நாட்டில் வானிலை சீற்றத்தினால் கடந்த இரு தினங்களாக மலையக பிரதேசங்களில் கடுமையான மழை மற்றும் பலத்த காற்றும் வீசப்பட்டு வருகின்றது எனினும் நேற்று (25) இரவு முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக தாழ்நிலைப் பிரதேசங்களில் அண்டி வாழும் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கந்தபளை , ஹைபொரஸ்ட், ரேஸ்கோஷ் குடிருப்பு , பம்பரகலை மற்றும் நானுஓயா பகுதிகளில் பெய்யும் கடும் மழை காரணமாக பெருமளவான மரக்கறி தோட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன அத்தோடு குறித்த பிரதேசங்களை அண்டிய வீடுகளில் வெள்ளப்பெருக்குடன் சிறு சிறு மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.

இதில் அதிகமாக கந்தப்பளை பிரதேசத்தில் பல இடங்களில் வெள்ள அனர்த்த நிலை உருவாகியுள்ளதுடன் கோர்ட்லோட்ஜ் சந்தி மற்றும் புதிய வீதி தொகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய நிலையால் நுவரெலியா – உடப்புசல்லாவ பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கா.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு செல்லும் மாணவர்களுக்கு விசேட ஏற்பாடுகள் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக செய்யப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபொட தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!