காஸா பிராந்திய நேரப்படி நாளை(19) காலை முதல் இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் ஆரம்பமாகும் என கட்டார் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை,போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பலமணி நேரங்களாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து இன்று (18) இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.
மேலும் இவ்வொப்பந்தத்தின் மூலம் கடந்த 15 மாதங்களாக இடம்பெற்று வரும் பாலஸ்தீன-இஸ்ரேல் போர் முடிவுக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்ப்பதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.