சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களை உறுதிப்படுத்துவதில் இலங்கை தேர்தல் ஆணைக்குழு மற்றுமொரு படி முன்னோக்கி எடுத்து வைத்து, தேர்தலின் போது எழும் முறைப்பாடுகளை விரைந்து தீர்ப்பதற்காக புதிய கைப்பேசி செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
தேர்தல் பிரச்சினைகளை உடனடியாக அறிக்கையிடுவதற்கான இலகுவானதும் வினைத்திறனானதுமான தேர்தல் முறைப்பாட்டுத் தீர்வு (EDR) செயலி எதிர்வரும் உள்ளூராட்சி அதிகார சபைகள் தேர்தலின் போது பரீட்சைக்குரியதாக அமையும்.
இதை APP Store மற்றும் Google Play இல் பதிவிறக்கம் செய்யலாம்.