இஸ்லாம் மதத்தை அபகீர்த்திக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக தீர்ப்பிடப்பட்ட பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் 9 மாதகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக 1500 ரூபா தண்டப்பணமும் விதித்து நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.
2016ம் ஆண்டு ஜூலை மாதம் 16ம் திகதி கிருலப்பனை பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் ஞானசார தேரர் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.