BREAKING

உலகம்

சீனாவின் ரக்கூன் வகை நாய்களில் கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

சீனாவின் ரக்கூன் வகை நாய்களில் கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கொரோனா பாதிப்பு முதன்முதலாக சீனாவில் கண்டறியப்பட்டது. பின்னர் உலகம் முழுவதும் பரவியது. இதுவரை கொரோனா வைரஸ் 75 கோடிக்கும் அதிகமானோரை பாதித்து உள்ளது. எனவே இது எவ்வாறு உருவானது என்பது குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதற்கமைய, இந்த வைரஸ் முதலில் வவ்வால்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக கூறப்பட்டது. பின்னர் சீனாவின் உகான் நகரில் உள்ள ஒரு இறைச்சி கூடத்தில் இருந்து பரவியதாக உயிரியல் வல்லுனர்கள் தெரிவித்தனர்.

அதேவேளை, சீனாவில் உள்ள ஒரு ஆய்வகத்தில் இந்த கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டதாக அமெரிக்கா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் தற்போது சீனாவின் இறைச்சி கூடத்தில் விற்கப்படும் ரக்கூன் வகை நாய்களில் கொரோனா வைரஸ் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் அது உறுதி செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!