மித்தெனியவில் தந்தை மற்றும் அவரது இரு பிள்ளைகள் துப்பாகியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்தக் கொலைக்கு ஒத்துழைப்பு வழங்கியமை தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் நேற்றிரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக டுபாய்க்கு செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கடுவன அங்குலன்தெனிய பகுதியைச் சேர்ந்த 23 வயதானவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலை தொடர்பில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.