உரமானியம் மற்றும் எரிபொருள் மானியத்தை தேர்தல்கள் ஆணைக்குழு இடை நிறுத்தம்

விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் அறிவிக்கப்பட்ட உரமானியம் மற்றும் எரிபொருள் மானியத்தை தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது.

விவசாயிகளுக்கு 25000 ரூபா உர மானியமும் மீனவ மக்களுக்கு எரிபொருள் மானியமும் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்ததுடன் இந்த மானியங்கள் நாளை முதல் அமல்படுத்தப்படவிருந்தன.
எனினும் தேர்தல் அறிவிக்கப்படும் போது, இத்தகைய மானியங்களை வழங்குவதில் வேட்பாளர்களுக்கு ஏற்படும் பாதகத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தேர்தலின் பின்னர் உரிய கொள்கை தீர்மானங்களை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதிக்கு அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இந்த உர மானியம் மற்றும் மீனவர்களுக்கான எரிபொருள் மானிய பிரேரணைகளும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நடைமுறைப்படுத்துமாறு பணிப்புரை விடுவிக்கப்பட்டது. எனினும் அப்போது ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தேர்தல்கள் ஆணைக்குழு அதனை இடைநிறுத்தியிருந்தது.

Exit mobile version