BREAKING

வெளிநாடு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பிடியாணை – சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பிடியாணை – சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் நிதியமைச்சர் யோவ் காலன்ட் ஆகியோருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீன மக்களின் மரணம் தொடர்பாக இஸ்ரேல் அளித்த அறிக்கைகளை நிராகரித்த நீதிமன்றம் மூவருக்கும் பிடியாணை பிறப்பித்துள்ளது.

போர் என்ற பெயரில் இஸ்ரேல் மனிதநேய விரோத செயல்களில் ஈடுபட்டதாகச் சர்வதேச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

காசாவில் மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும், போர்க் குற்றங்கள் நடந்ததாகவும் கூறி ஹமாஸ் இராணுவ தளபதியாக இருந்து இஸ்ரேலால் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் முகமது தெய்ஃப் ஆகியோருக்கும் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின், ஜப்பான் உள்ளிட்ட 124 ICC உறுப்பு நாடுகள் தங்கள் நாட்டிற்குள் இவர்கள் நுழைந்தால் கைது செய்ய வேண்டியது கட்டாயமாகிறது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!