இரண்டு சந்தேக நபர்களும் பொலிஸாரால் சுட்டுக் கொலை

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று (21)இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை மேறகொண்ட  இருவரையும் கொழும்பு ஒருகொடவத்த பகுதியில் வைத்து கிரான்பாஸ் காவல்துறையினர் கைது செய்தனர்.

பின்னர்,கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு (21) மறைத்து வைத்திருந்த ஆயுதங்களைக் காட்ட பொலிஸார் சந்தேகநபர்களை அழைத்துச் சென்றபோது, ​​பொலிஸாரிடம் இருந்த துப்பாக்கியைப் பறித்து அவர்களைச் சுட முயன்ற போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரும் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Exit mobile version