இரண்டாவது நாளாகவும் தொடரும் பணிப்பகிஷ்கரிப்பு

கடந்த (30) ஆம் திகதி மாலை நுவரெலியா தலவாக்கலை பேருந்து சாரதிக்கும் நுவரெலியா ஹட்டன் சொகுசு பேருந்து சாரதியிடையே தனிப்பட்ட முறையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறி இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

பின்னர் அன்றிரவு இனந்தெரியாத நபர்களால் நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் சேவையில் ஈடுபடும் இரண்டு பேருந்துக்களின் முன் பக்கம் உள்ள கண்ணாடிகளை தாக்குதல் நடத்தி உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது இதன் காரணமாக நேற்று காலை முதல் தினம் நுவரெலியா தலவாக்கலை தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் தீடீர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு ஆதரவாக தலவாக்கலை ஹட்டன் பிரதான வீதியில் சேவையில் ஈடுபாடும் தனியார் பேருந்து ஊழியர்களும் இன்று இரண்டாவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பேருந்து பயணங்களை மேற்கொள்ளும் பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள்,ஊழியர்கள்,பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version