BREAKING

உள்நாட்டு செய்தி

இந்தியப் பிரதமருக்கு அனுராதபுரத்தில் அமோக வரவேற்பு

இந்தியப் பிரதமருக்கு அனுராதபுரத்தில் அமோக வரவேற்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இலங்கைக்கு அரச பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று (06) முற்பகல் அனுராதபுரத்தை சென்றடைந்தார்.

வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச,சுகாதாரம்  மற்றும் ஊடகத்துறை அமைச்சர் Dr நளின் த ஜயதிஸ்ஸ, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரால் இந்தியப் பிரதமருக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

பின்னர், பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை விமானப் படையின் மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை்கு அரச பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!