அறுகம்பைக்கு செல்ல வேண்டாம் – அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை

அறுகம்பை பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவல் எச்சரித்துள்ளதால், மறு அறிவித்தல் வரும் வரை அமெரிக்க பிரஜைகள் அறுகம்பை பகுதியை தவிர்க்குமாறு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அமெரிக்க பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள பாரிய ஆபத்து காரணமாக, மறு அறிவித்தல் வரை அறுகம்பைக்கு அமெரிக்க தூதரகம் பயணத்தடை விதித்துள்ளது.

மேலும், மறு அறிவித்தல் வரை அறுகம்பை பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்க பிரஜைகளை கேட்டுக்கொள்வதாக தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும்க குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version