யாழ். தனியார் விருந்தினர் விடுதியில் அர்ச்சுனா எம்.பி இன் தாக்குதலுக்குள்ளான நிலையில் ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இது குறித்து மேலும் தெரியவருவதாவது..
யாழிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் அர்ச்சுனா எம்.பி மற்றும் சட்டத்தரணி கௌசல்யா ஆகிய இருவரும் நேற்று (11) இரவு உணவருந்த சென்றுள்ளனர்.
இந்நிலையில் ஜேர்மன் நாட்டை சேர்ந்த இலங்கையர் ஒருவர் மற்றும் சாரதி இடையே ஏற்பட்ட முரண்பாட்டின் நிமித்தம் பா.உ.அர்ச்சுனா காணொளி எடுத்துள்ளார்.
இந்நிலையில் குறித்த வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர் சட்டத்தரணி மற்றும் வைத்தியராக இருந்து அனுமதியின்றி பிறரை காணொளி எடுக்கலாமா என கேட்ட நிலையில் தொடர்ந்து அர்ச்சுனா அங்கு நின்ற சாரதியினையும் காணொளி எடுத்துள்ளார்.
இந்நிலையில் அவரது தொலைபேசி பறிக்கப்பட்டு எறிந்த நிலையில் அர்ச்சுனா குறித்த சாரதி மீது Glass கோப்பையால் தாக்கியுள்ளார்.
மேலும் குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் காயப்பட்ட நபரை போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரியை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது அர்ஜுனாவின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.