அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக சி.ஐ.டியில் பல முறைப்பாடுகள்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் மீண்டும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டை சிவில் அமைப்புக்கள் மற்றும் சிங்கள அமைப்புகளின் ஒன்றியம் ஆகியன ஒன்றிணைந்து நேற்றைய தினம் (23) சி.ஐ.டியில் சமர்ப்பித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் இனவாதத்தை தூண்டும் வகையில் அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிவிப்பு ஒன்று தொடர்பில் விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்காக கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version