நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசேட விசாரணைக் குழுக்கள் கொழும்பு மாவட்டத்தில் உள்ள பல மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களை சோதனையிட்டனர். இதில் அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் 20 வர்த்தகர்களை இனங்கண்டதுடன், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதேவேளை இரவு நேர சோதனைகள் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.